Monday 30th of December 2024 09:51:06 AM GMT

LANGUAGE - TAMIL
.
மகாராணி எலிசபெத்தின் உடலம் தாங்கிய பேழை விண்ட்சர் கோட்டைக்கு

மகாராணி எலிசபெத்தின் உடலம் தாங்கிய பேழை விண்ட்சர் கோட்டைக்கு


இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், மகாராணியின் உடலம் தாங்கிய பேழை தற்பொழுது விண்ட்சர் கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து இலங்கை நேரப்படி பிற்பகல் 4.45 அளவில் ஆரம்பமான மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின் பூதவுடல் தாங்கிய பேழையுடனான பேரணி இலங்கை நேரப்படி இரவு 8.30இற்கு வின்ஸ்டர் கோட்டையை சென்றடைந்தது.

விண்ட்சர் கோட்டையில் மகாராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளிக்கவுள்ளனர்.

முன்னதாக மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கான அரச மரியாதை செலுத்தும் நிகழ்வு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபத் தமது 96 வயதில் கடந்த 8ம் திகதி காலமனார்.

70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபத், மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் காலமானார்.

அவருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு அவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார்.

அவரது மறைவுக்கு பல நாடுகளின் அரச தலைவர்களும் அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மூத்த புதல்வரும் வேல்ஸின் முன்னாள் இளவரசருமான சார்ள்ஸ் புதிய மன்னராக நியமிக்கப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE